Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற இரு காவல்துறையினர் கைது : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

.

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும் மற்றும் 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்னர்.

இதையடுத்து, குறித்த பெண் தனது காதலனுடன் இருக்கும் காணெளியை காண்பித்து மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.

இந்தநிலையில், காவல்துறையினரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினர், மேற்படி இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் இன்று (22) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.