நடுவானில், தனி விமானத்தில் பெண் விமானி… திடீரென மேலே திறந்த கதவு.
.
“ஆம்ஸ்டர்டாம்,நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் விமானி நரைன் மெல்கும்ஜன். 2 பேர் அமர கூடிய 330 எல்.எக்ஸ். ரக சிறிய விமானம் ஒன்றில் அவர் பயிற்சி பெறுவதற்காக பறந்து சென்றுள்ளார்.
அப்போது, விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் திடீரென அதன் மேல்கதவு திறந்து கொண்டது. இதனால், பலத்த காற்று அவருடைய முகத்தில் வீசியது. இந்த அமளிக்கு இடையே அவரால், பயிற்சியாளரையும் சரிவர தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனினும், தொடர்ந்து பறக்க வேண்டும் என்ற அறிவுரையை நினைவுகூர்ந்து பின்பற்றி இருக்கிறார்.
அவர் கஷ்டப்பட்டு, அந்த விமானம் விபத்தில் சிக்கி விடாதபடி மெதுவாக கீழே பறந்து வந்து தரையிறங்கினார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது.விமானத்தில் பறப்பதற்கு முன் முறையாக பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், எல்லாம் சரியாக இருப்பது பற்றி பறப்பதற்கு முன் உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறி தன்னுடைய தவறை ஒப்பு கொண்டிருக்கிறார்.
அவருக்கு பார்ப்பதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. விமானத்தில் பறப்பது பற்றி பல வீடியோக்களை வெளியிடும் அவர், இது மற்ற விமானிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், அதனை விரைவாக பகிர்ந்து கொள்ளாததற்காக வருத்தமும் தெரிவித்து கொண்டார்.