Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் அமைச்சிடம் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதுவரை காலமும் இந்த குடியிருப்புகளில் இருந்த அமைச்சர்கள் உரிய சாவியை அந்த குடியிருப்புக்கு வரும் அடுத்த அமைச்சரிடம் ஒப்படைக்கவில்லை.

இந்த குடியிருப்புகளில் வசிக்கும் அமைச்சர்கள், தாம் பதவி வகித்த அமைச்சின் ஊடாக தமது குடியிருப்புகளுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும், கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சிடம் எவ்வித தகவலும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அண்மையில் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போது, ​​இந்த குடியிருப்புகளின் சாவிகளை உடனடியாக கையகப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சொத்துக்களை பாதுகாக்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், அமைச்சர்கள் தங்கும் குடியிருப்புகளில் சாவிகள் எங்கே என்று கூட தெரியாத அரச நிர்வாக அமைச்சு, குடியிருப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என தெரியவருகிறது.