Breaking News
தமிழ் சமூகத்தின் உன்னத தாய் நிலம் ஈழமும் தமிழ் தேசமும் ஒன்றிணை முடியாமல் கடல் பிரித்துப் போட்டுள்ளது.
அங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உலகத்திற்கு ஒரு செய்தி ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் தினம் தினம் அது இழவு வீடு
ஈழத் துயரத்தின் மடியில் உருவான தமிழ் தேசியம்.
உலகத்தில் எந்த நாட்டில் அழிவு ஏற்பட்டாலும், போர் துயரங்கள் ஏற்பட்டாலும், ஒரு உயிர் சிதைக்கப்பட்டாலும், பல உயிர்கள் கொல்லப்பட்டாலும், பெண்ணுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்தாலும் முதல் குரல் கொடுத்து தெருவுக்கு வருபவன் தமிழன். ஆனால் உலகமெங்கும் வாழும் தமிழ் சமூகத்தின் உன்னத தாய் நிலம் ஈழமும் தமிழ் தேசமும் ஒன்றிணை முடியாமல் கடல் பிரித்துப் போட்டதனால் என்னவோ இங்கிருக்கும் தமிழனுக்கு எல்லை தாண்டி 13 மைல்காத தூரத்தில் கடல் நீருக்கு இணையாக, எதிர் போட்டி போட்ட சக தொப்புள் கொடி உறவின் இரத்தத்திற்கு பதில் கேட்க நேரமில்லை. இங்கே தமிழன் என்ற போர்வைக்குள் பல மொழி பேசி வாழும் இந்திய ஒன்றியத்தின் மாந்தர்களும் கண்ணுக்கு அமைதி காக்கின்றார்கள். பாலஸ்தீனத்தின் நடக்கின்ற போருக்கு பொங்கும் இஸ்லாமிய சகோதரர்கள் இஸ்லாமிய அமைப்புகள் ஏனோ தமிழன் குருதியை தண்ணீருக்கும் கீழ் பார்க்கின்றார்கள். இங்கே தமிழனுக்கு விடுதலை பெறப் போகிறோம் என கட்சி கட்டி ஈழத் துயரத்தின் மடியில் உருவான தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள் ஈழத் தமிழனுக்காக, இந்நாட்டின் தமிழருக்காய் சாதித்தது என்ன?
மண்ணை காத்தார்களா? மனிதநேயத்தை காத்தார்களா? பெண்ணை காத்தார்களா? பொன் பொருளைக் காத்தார்களா? தமிழன் கலாச்சாரத்தை காத்தார்களா? தமிழன் மெய்யியலை மீட்டார்களா?
எதையுமே செய்யாமல் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொண்டார்கள். 15 ஆண்டுகள் கடந்திருக்கும் இந்த நேரத்தில் உலக வல்லாதிக்கத்துக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்ட எம் உயிர் சொந்தங்களுக்கான விடை என்ன? என்ற ஒரு கேள்வியையாவது முன்வைத்து தொடர்ந்து அதன் மீது அழுத்தம் கொடுத்தார்களா? என்றால் இல்லை.
ஆனாலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நாங்கள் இதோ விடுதலை பெற்று தர போகிறோம் தமிழன் உரிமை மீட்க போகிறோம் என்று மார்தட்டும் வேஷம் எதற்கு? என்ற கேள்வியோடு?
ஏன் நீங்கள் அதைச் செய்யக்கூடாது என்று முட்டாள்தனமாக என்னை நோக்கி கேள்வி வைக்கும் முரட்டு சொம்புகளுக்கு ஒன்றைச் சொல்லுகின்றேன்,
2009இல் உலகவல்லாதிக்கம் நடத்திய பேய் ஆட்டத்தில் மண்எது? மண்டைஎது ?நீர் எது? ரத்தம் எது என்று தெரியாமல் சிதருண்டு போன நம் உயிர் சொந்தங்களின் அந்தக் குருதியை இந்த நிலத்தில் அரசியலாக பேசி வளர்ந்தது யார்? ஆங்காங்கே சிறுசிறு புள்ளிகளாய் நின்ற தமிழ் தேசியவாதிகளை, கூட்டி ஒரு கூட்டுக்குள் வைத்து அடைத்து, காய் அடித்து விட்டது யாரோ அவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இந்தியா பெரிய சனநாயக நாடு மனிதநேயமிக்கவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்றால், ஒரே ஒரு கடல் நடுவில் மறுகரையில் , அழித்தொழிக்கப்பட்ட மனித உயிர்களுக்காக வாய் திறக்காதவர்களை எப்படி சகோதரன் என்று சொல்லுவது,
அங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உலகத்திற்கு ஒரு செய்தி ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் தினம் தினம் அது இழவு வீடு .தாய் தன் மகள் மகன்களை மறப்பாளா? தந்தை தன் குழந்தைகளை மறப்பாரா? மனைவி தன் கணவனை மறப்பாளா? கணவன் தன் மனைவியை மறப்பானா? எதையுமே மறக்க முடியாத,
இன்று வருமோ? என்னுயிர் நாளை வருமோ? என் உயிர் .இன்று கேட்குமோ என் உயிரின் ஓசை நாளை கேட்குமோ என் உயிரின் ஓசை என்று 15 ஆண்டுகளாக தவம் இருக்கும் ஈழத் தமிழனின் ஏக்கப் பெருமூச்சு கடல் தாயின் மீது பட்டால் கடலே கொந்தளிக்கும் அளவிற்கு இருக்கும்போது, நாம் ஏன் அதைப் பற்றி பேச மௌனிக்கின்றோம்' என்ற கேள்வியோடு என் உயிர் சொந்தங்களே உங்கள் துயரத்தில் மட்டும் தான் எங்களால் பங்கு பெற முடியும் என்ற கேவலமான பிறவியாக பிறந்த இந்த பிறவியை நினைத்து அருவருத்து நிச்சயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்ற ஊரில் தான் உண்மை அதற்கான விடையை இந்த உலக ஆதிக்கம் தருமா என்றால் தராது நிச்சயம் நம் ஆன்மாக்கள் அதற்கான விடையைத் தரும் உங்கள் தேடலும் உங்கள் கண்ணீரும் காற்றோடு கலக்காது பிரபஞ்சத்தோடு கலக்கும்,
அது உங்களுக்கான விடையைக் கொடுக்கும்.
இந்த நிலத்தில் ஈழத் தமிழர் விடுதலை பேசும் யாரின் வார்த்தைகளுக்கும் செவி கொடுக்காதீர்கள்.
உங்கள் விடுதலை உங்கள் கையில் காரணம் நீங்கள் விடுதலைக்காக 75 ஆண்டுகள் தவம் இருக்கின்றீர்கள்.
இந்த நிலத்தில் இருப்பவன் அடிமை என்று உணர்ந்தும் அதை அழகாக ருசித்து வாழ்கின்றான். அடிமை என்று தெரிந்தவனும் சமரசம் என்ற பெயரில் சாய்ந்து நிற்கின்றான். எனவே உங்கள் விடுதலை உங்கள் கையில்.
ஆனால் உலகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
குயிலி நாச்சியார்
தலைவர்
அகரத் தமிழர் கட்சி.