Breaking News
தேர்தல்கள் ஆணைக்குழு சரியான தேர்தல் திகதியை அறிவித்ததன் பின்னர் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும்
முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பங்களுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்.
தேர்தலுக்கான தயார்படுத்தல்கள்: வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் குறித்து அரசாங்க அச்சக அதிகாரியின் அறிவிப்பு.
தேர்தல்கள் ஆணைக்குழு சரியான தேர்தல் திகதியை அறிவித்ததன் பின்னர் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டுகளை விரைவாக அச்சிடுவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் வசதிகள் அச்சகத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அரசாங்க அச்சக அதிகாரி
தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதனூடாக பணிகளை 28 நாட்களுக்குள் நிறைவு செய்ய முடியும்.
எவ்வாறாயினும் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதி தேவைப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பங்களுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தேர்தலுக்கான தயார்படுத்தல் நடவடிக்கைகளும் மும்முறமாக இடம்பெற்று வருகின்றன.