Breaking News
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அஞ்சலி.
.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அஞ்சலி.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருப்பதாக உணர்வு மேலிட தெரிவித்தார்.