Breaking News
பொடி மெனிகே புகையிரதத்தில் தீ பரவல் !
.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதம் இன்று (03) ஹப்புத்தளை புகையிரத நிலையத்தை அண்மிக்கையில் திடீரென தீப்பிடித்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை புகையிரத நிலைய ஊழியர்கள் , பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு எஞ்சின் கொண்ட பொடி மெனிகே ரயிலின் பின் எஞ்சின் இவ்வாறு தீப்பிடித்துள்ளது.