Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இது ஒரு சர்வாதிகார நாட்டின் கொடுமையைக் குறிக்கும் ஜோக்!

அப்போது ஒருவர் பெருமூச்சு விட்டாராம். அருகில் இருந்த மற்றவர் உடனே நீண்டதொரு பெருமூச்சு விட்டாராம்.

இது ஒரு சர்வாதிகார நாட்டின் கொடுமையைக் குறிக்கும் ஜோக்!
ஒரு சர்வாதிகார நாட்டில் இருவர் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்தார்களாம்.அப்போது ஒருவர் பெருமூச்சு விட்டாராம். அருகில் இருந்த மற்றவர் உடனே நீண்டதொரு பெருமூச்சு விட்டாராம். உடனே இருவரையும் பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டதாம்.இருவரும் அரசுக்கு எதிராக அரசியல் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதாம்.இது ஒரு சர்வாதிகார நாட்டின் கொடுமையைக் குறிக்கும் ஜோக் தான். ஆனால் இது இப்ப உண்மையில் இலங்கையில் நடக்கிறது.சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் பெண் போராளி ஒருவர் “ முகநூலில் முன்புபோல் எழுத முடியவில்லை. புலனாய்வாளர்கள் கண்காணிக்கின்றனர்” என தெரிவித்திருந்தார்.
அடுத்து இலக்கியவாதி ஒருவர் நூல் வெளியீடு ஒன்றை செய்தமைக்காக அழைத்து விசாரிக்கப்பட்டிருந்தார்.இதைவிட முன்னாள் போராளி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு அவர் மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எல்லாவற்றையும்விட தமிழ் மக்கள் இறந்த தம் உறவுகளை நினைவுகூர இனி அனுமதிக்கப்போவதில்லை என ராணுவ தளபதி மிரட்டியுள்ளார்.தேர்தல் வர இருக்கின்ற இந்நிலையில் அதுபற்றி கவலைப்படாமல் சிங்கள அரசு அடக்குமுறையை ஏவி விடுகின்றது.இதற்குரிய பதிலை தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் நிச்சயம் தெரிவிப்பார்கள்.ஆம். எமது விடுதலைக்காக நாம் எதையும் சந்திப்போம் என்பதை எம் எதிரிக்கு புரிய வைப்போம்.