இலங்கையர் நால்வர் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு தயார் நிலையில்! அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்,
நால்வரும் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு முன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என இந்திய ஊடகங்கள் .
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள்: தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக தகவல்.
அத்துடன், குறித்த நால்வரும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என குஜராத் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக குறித்த நால்வரும் அகமதாபாத் நகருக்கு சென்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இரவு விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இதன்படி, 27 வயதுடைய மொஹமட் நஃப்ரான், 33 வயதான மொஹமட் நுஸ்ரத், 35 வயதான மொஹமட் ஃபரிஷ் மற்றும் 43 வயதான மொஹமட் ரஷ்டீன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் பிராந்தியத்தில் இருந்து வருகைத்தரும் பயணிகளின் பட்டியலை பரிசீலித்து, கொழும்பில் உள்ள அதிகாரிகளினால் அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே கைது செய்யப்பட்டதாக குஜராத் பொலிஸ் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நால்வரும் பாகிஸ்தானில் உள்ள அபு எனும் நபருடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அந்த நபர் இவர்களை இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு ஊக்குவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர்கள் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்களுடன் புரோட்டான் மின்னஞ்சல் மற்றும் என்ட் -டு- எண்ட் என்க்ரிப்ஷன் மின்னஞ்சல் மூலமாக தொடர்கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட நால்வரும் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு முன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.