Breaking News
28 ஆம் ஆண்டு நினைவேந்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சாட்சியாக பாரிஸ் மண்ணில் இந்த மாவீரர்கள் விதையாகிப் போனார்கள்.
.
லெப்.கேணல்.நாதன்- கந்தையா போரின்பநாதன், கப்டன் கஜன் - கந்தையா கஜேந்திரன் ஆகிய இரு விடுதலைப்புலிகள் 26.10.1996 ஆம் ஆண்டு தமிழர்களின் வர்த்தக பகுதியான பாரிஸ்-10, லாச்சப்பல் என்னுமிடத்தில், தமிழின எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல், பிரான்சில் Cimetiére Parisien de Pantin இல்,லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் விதைக்கப்பட்ட துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.