Breaking News
முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் !
.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (23) காலை பதவியேற்ற அனுரகுமார திஸாநாயக்க முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னரே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.