Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காற்றாலை, கனியமணல் அகழ்வு விவகாரம் -ஜனாதிபதி அநுர இரட்டை நிலைப்பாடு - சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கனியமணல் அகழ்வு மற்றும் காற்றலை மின்சார திட்டங்களை தடுக்க ஒரு மாத அவகாசம்

மன்னார் காற்றாலைத் திட்டம், கனிய மணல் அகழ்வு  போன்றவற்றில்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முரண்பட்ட நிலையில் மாறுபட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இந்த இரட்டை நிலைப்பாடு போராட்டத் தரப்பான மன்னார் மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே எதிர்காலத்தில் கொடுக்கும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட போராட்டத் தரப்பின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அநுர சந்தித்த போது அநுர மேற்கொண்ட உரையாடல் சந்தித்தவர்களுக்கு சந்தேகத்தையும் இரட்டை நிலைப்பாட்டையும் உணர வைத்தது. 

அத்தோடு கனியமணல் அகழ்வு மற்றும் காற்றலை மின்சார திட்டங்களை தடுக்க ஒரு மாத அவகாசம் கேட்டார் . 
திட்டங்கள் தொடர்பாக அதன் சாதக பாதகங்களை ஆராய ஒரு குழுவை நியமிப்பதாகவும் குழுவின் அறிக்கையின் பின்னர் முடிவுகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.

போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை  சந்தித்த சில தினங்களில் மன்னார் மாவட்ட வணக்கத்திற்குரிய  ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த போது பிரச்சினைக்குரிய திட்டங்களை உடனடியாக நிறுத்துவதாக  ஆயரிடம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. 
ஒரு மாத அவகாசம் கேட்ட ஜனாதிபதி அநுர ஒரு சில நாட்களில் உடனடியாக நிறுத்துவதாக கூறியமை முரன்பட்ட இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

காற்றலை மின்சாரத்தை அமைப்பதற்கான உபகரணங்கள் அடங்கிய நூற்றுக்கு அதிகமான பார ஊர்திகள் மன்னார் மாவட்டத்துக்குள் வந்துள்ள நிலையில் ஐனாதிபதியின் முன் பின் முரனான உரையாடல் அவரது இரட்டை நிலைப்பாட்டையே உறுதி செய்கிறது என தெரிவித்தார்.