Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம்

,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம் இன்று நேற்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவிக்கையில், 2,984 ஆவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது உறவுகளை தேடி அலைந்து திரிவதாகவும் இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் தமக்கான தீர்வினை பெற்றுத் தரவில்லை.

சர்வதேசத்திடம் ஒரு முகமும் எம்மிடம் ஒரு முகமாக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்று தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கினர்.

ஆனாலும் இதுவரையில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.