"நீங்கள் பள்ளிப் பாடங்களில் தோல்வியடைந்துவிட்டு, ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது எங்கள் தவறல்ல.
மத்திய கிழக்கு மக்களை 'விடுதலை செய்யப்போவதாக' நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப்! - கத்தார் கல்வி அமைச்சர் மிகவும் காட்டமான, நேரடியான பதில்!!
மத்திய கிழக்கு மக்களை 'விடுதலை செய்யப்போவதாக' இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கு, கத்தார் கல்வி அமைச்சர் தனது எக்ஸ் (X) தளத்தில் மிகவும் காட்டமான மற்றும் நேரடியான பதிலை வழங்கியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் தலையீடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், "நீங்கள் பள்ளிப் பாடங்களில் தோல்வியடைந்துவிட்டு, ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது எங்கள் தவறல்ல. நிஜ உலகம் என்பது ஒரு திரைப்படம் கிடையாது; இங்கே வாழ்வது வெறும் கதாபாத்திரங்கள் அல்ல, அவர்கள் மனித ஆன்மாக்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ராணுவ மற்றும் அரசியல் தலையீடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், "தயவுசெய்து எங்களை 'விடுதலை' செய்கிறோம் என்ற பெயரில் துன்புறுத்துவதை நிறுத்துங்கள். எங்களை எங்கள் போக்கில் தனியாக விடுங்கள், நாங்கள் மிகச் சிறப்பாகவும் அமைதியாகவும் இருப்போம்," என மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார். இந்த கருத்து தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


