Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!

அமரர் பொ.நாகலிங்கம் 1980ஆம் ஆண்டு உயிரிழந்திருந்திருந்தார். அவருக்கு 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சிலை திறக்கப்பட்டிருக்கின்றது.

எமது மக்களுக்கு வேறு விடயங்கள் இருந்தாலும் அபிவிருத்தி முக்கியம். அதனை உணர்ந்து அன்றே செயற்பட்டவர்தான் செனட்டர் பொ.நாகலிங்கம். அதனால்தான் அவரால் சுன்னாகம் பொதுச்சந்தை மற்றும் சுன்னாகம் பொது நூலகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய முடிந்தது. இப்போதும் எமது மக்களுக்கு அபிவிருத்தி முக்கியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 

சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும், சுன்னாகம் பிரதேச சபை முன்றலில் இன்று சனிக்கிழமை (07.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில், அமரர் பொ.நாகலிங்கம் 1980ஆம் ஆண்டு உயிரிழந்திருந்திருந்தார். அவருக்கு 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சிலை திறக்கப்பட்டிருக்கின்றது. அவரின் சேவையை மதிப்பளித்து அதற்கு நன்றிகூறும் வகையில் இந்தச் சிலையைத் திறந்து வைத்தமைக்கு பாராட்டுக்கள். இன்று சிலர் செய்த உதவிகளை உடனேயே மறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் உதவி செய்பவர்களை தூற்றுகின்றனர். 

நிகழ்வின் தலைவர் குறிப்பிட்டதைப்போல, சிலை வைப்பதென்பது அவரின் சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் எதிர்காலத்தில் மற்றையவர்களும் அவரைப்போல சேவை செய்யவேண்டும் என்பதற்காகவும்தான். அவர், லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்தமையால் அவருக்கு இங்கு பல அபிவிருத்திகளைச் செய்யக் கூடியதாக இருந்தது. அத்துடன் அவரிடம் தலைமைத்துவப் பண்பும் இருந்தமையால் இந்தப் பிரதேசத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது, என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், உடுவில் பிரதேச செயலர் பா.ஜெயகரன், சுன்னாகம் பிரதேச சபைச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.