Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் முயற்சி!

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 
தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதற்கு தமிழ் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி , தமது விகாரைக்குள் எவ்வித புதிய கட்டுமானங்களையும் தான் செய்ய மாட்டேன் என்றும் , விசேட பூஜைகளுக்கோ பெரஹரா போன்ற எதற்கும் தான் அனுமதி கொடுக்க வில்லை எனவும் ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் புத்தர் சிலையுடன் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழு ஒன்று , காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் காத்திருக்கின்றனர் என காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிற்றுண்டி சாலைக்கு விரைந்த பொலிஸார்  புத்தர் சிலையை மீட்டதுடன் , புத்தர் சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.