2025இல் நாட்டில் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்! எச்சரித்துள்ள ரணில் தரப்பு
.
2025ஆம் ஆண்டு நாட்டில் பாரிய குழப்பமொன்றை எதிர்பார்க்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றுக்கு புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள திசைக்காட்டி குழுவானது, நாட்டில் இடதுசாரி இயக்கத்தை நிரந்தரமாக அழித்தொழிக்கும் என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நீங்கள் பொருளாதாரத்தில் சிக்கித் தவித்த போது உங்களை விடுவித்தவர் ரணில் விக்ரமசிங்க.
உலகின் சக்தி வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவடைந்தது, டொனால்ட் ட்ரம்பிற்கு 78 வயதாகிறது.
எங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவாலும் நாட்டைப் பன்னிரண்டு வருடங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். நமது சிந்தனைகளை விடவும் அவருது சிந்தனை சிறந்தது.
எமது அரசாங்கம் உருவாக்கிய பாதையில் இருந்து இவர்கள் வெளியேறினால் மீண்டும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டியிருக்கும் என்றார்.