இஸ்ரேலிய தாக்குதலால் லெபனானில் மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்வு!
.
இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை (29) தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது அதிக ரொக்கெட்டுகளை ஏவியது. யேமனில் ஈரான் ஆதரவு ஹவுதி இயக்கத்தின் இராணுவ இலக்குகள் மீது “பெரிய அளவிலான” வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.
உயர்மட்ட இராணுவத் தளபதி அலி கராக்கி மற்றும் மூத்த மதகுரு ஷேக் நபில் கௌக் ஆகியோரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, பெய்ரூட் மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறும்படி வான்வழித் தாக்குதல்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக லெபனானின் பிரதமர் மிகாட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.