Breaking News
களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து
.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின் அமைப்பில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.
களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தற்போது தீயை கட்டுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிடத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தரைத்தளத்தில் ஏற்பட்ட தீயை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை தீயை கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர்ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.