Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ரணிலுக்கு ஆதரவு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக முன்னிறுத்தினால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்பது குறித்து கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சகல விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த செயலாளர், கிராம மட்டத்திலிருந்து கட்சியை மீளப் பலப்படுத்தி அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

பல கூட்டணிகள் உருவாகி வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தான் மிகப்பெரிய கூட்டணி உருவாகியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் மத்திய குழு கூடி புதிய அதிகாரி குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக செயற்பட்டு வருகிறார்.” என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.