Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரான்ஸ் தூதுவரின் மரணம் குறித்து இன்று இறுதி முடிவு.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது 56 ஆவது வயதில் பிரான்ஸ் தூதுவர்  உயிரிழந்தார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் இந்நாட்டில் நடைபெறுமா? அல்லது அவரது உடல் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த நிலையில், நேற்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது 56 ஆவது வயதில் பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார்.

1970 ஆம் ஆண்டு பிறந்த Jean Francois Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக கடமையாற்றி வந்தார்.தொழில் ரீதியான இராஜதந்திரியான அவர் முன்னர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துணை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்தார்.