Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

நூறு கோடி பேரம்: ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்குமாறு கட்சியின் உறுப்பினர் ஒருவரிடம் நூறு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மஹரகமயில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

”செல்லும் இடமெல்லாம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு இலங்கையரும் ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அணிவகுத்து வருகின்றனர்.

வெற்றி பெறுவதில் முன்னர் சந்தேகம் கொண்டிருந்த ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் தற்போது பலமான வெற்றி மனப்பான்மையுடன் உள்ளனர்.

இன்னும் 34 நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவார் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.

கிராமத்தில், சந்தியில், கடைகளில், சந்தையில், முச்சக்கரவண்டியில், திருணங்களில் என நாட்டின் அனைத்து இடங்களிலும் சஜித்தின் வெற்றி குறித்து மட்டுமே பேசுகிறார்கள்.

சஜித்தின் வெற்றியே நாட்டில் நிலவும் அரசியல் யதார்த்தம் என போட்டிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கூறுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அருகில் இருப்பவர்களுக்கும், சஜித் வெற்றி பெறுவார் எனத் தெரியும்.

இன்று மக்கள் வீட்டில் தமது வீடுகளில் மின்விளக்கை எரிய செய்யும் போதும், தண்ணீர் குழாயைத் திறக்கும்போதும் இருமுறை யோசிக்க வேண்டியுள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி மகிழ்ச்சியற்ற நிலையில் வாழும் தேசமாக நாம் மாறியுள்ளோம். அதனால் எம்.பிகளுக்கு பேரம் பேசி வருகின்றனர். ஐ.ம.சவில் ஒரு எம்.பிக்கு 100 கோடி ரூபா பேரம் பேசப்பட்டள்ளது.” என்றார்.