Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம்.

எங்கள் இனத்தின் ஆயுதரீதியான ஆத்மபலத்தை இழந்தபோதும், விடுதலை குறித்த எங்கள் பயணத்தின் வீரியம் இன்னும் குறைந்துவிடவில்லை

விடுதலை வேட்கைக்கு இழப்புக்கள் தடையில்லையாம்; சிறீதரன்.

விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று (வெருகல்) பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (12) வெருகல் – சீனன்வெளி பகுதியில், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் வாரத்தை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மக்கள் முன் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம். அந்த அவலத்தின் விளிம்பில் எங்கள் இனத்தின் ஆயுதரீதியான ஆத்மபலத்தை இழந்தபோதும், விடுதலை குறித்த எங்கள் பயணத்தின் வீரியம் இன்னும் குறைந்துவிடவில்லை. தமிழ்த்தேசிய
அரசியல் பயணத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவதற்கான உந்துதலை, இறந்த எம் உறவுகளின் ஆத்மாக்களே தருகின்றன என்றார்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட க்கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன், ஈச்சிலம்பற்று
பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் சங்கர், ஓய்வுநிலை அதிபர் இரத்தினசிங்கம், மற்றும் மாவட்டக் கிளை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.