Breaking News
உக்ரைனை கைவிட மாட்டோம்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி
.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் பேசியதாவது: காசாவில் அமைதியை ஏற்படுத்துவதுடன், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
புதின் நடத்தி வரும் போர் தோல்வியை சந்தித்து உள்ளது. உக்ரைனை அழிக்க வேண்டும் என அவர் நினைத்தார்.
ஆனால், அந்நாடு இன்னும் சுதந்திரமாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் சோர்வடைய மாட்டோம். அந்நாட்டை விலக்கி பார்க்க முடியாது. உக்ரைன் வெல்லும் வரை, அந்நாட்டை கைவிட மாட்டோம்” என்றார்.