Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

செருப்பு அணிவதை கைவிட்ட விஜய் ஆண்டனி.

.

 

இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயல்பாகவே அமைதியான சுபாவம் உடையவர். அதிலும் தற்போது அவரது மகள் மறைவுக்கு பிறகு இன்னும் அமைதியாகி விட்டார். அவரது பேச்சில் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சமீபகாலங்களில் அவர் காலில் செருப்பு அணிவதை தவிர்த்து வருகிறார். ஏதாவது வேண்டுதலாக இருக்கலாம் என்று எல்லோரும் கருதி வந்தார்கள். ஆனால் இனி செருப்பு அணிய மாட்டேன் என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஐதராபாத்தில நடந்த அவரின் மழை பிடிக்காத மனிதன் பட புரமோஷன் நிகழ்வில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது “நான் சில நாட்களுக்கு முன் செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது. செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது. ஆரோக்கியத்துக்கும் அது நல்லதுதான். அது மட்டுமின்றி நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். நான் எப்போது செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்.