Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதித் தேர்தலில் மு.கா. யாருக்கு ஆதரவு?: ஹக்கீமின் நிலைப்பாடு.

.

 

“ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி இன்னும் இறுதியான – உறுதியான முடிவை எடுக்கவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த அணியுடன் பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவிலேயே இருக்கின்றோம். எனினும், கட்சி மாற்று முடிவை எடுத்தால் அது பற்றியும் பரிசீலிக்க வேண்டி வரும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்கள் அறிவிப்புக்களை விடுத்திருந்தாலும், ரணில் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் வரை நம்ப முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் என்ற அதிக நம்பிக்கை உள்ளது.” – என்றார்