Breaking News
அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி
.

திண்டுக்கல்: அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில், கடந்த 2019, டிசம்பர் 2ஆம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் மூன்று ஆண்டுகளாக கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், பணிகள் நிறைவுற்று கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்நிலையில், மலைக்கோயிலின் ராஜ கோபுரம் உச்சியின் இருபுறமும் கொம்பு போன்ற பகுதியில் ஒரு பகுதி உடைந்துள்ள சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, பழனி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.