Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு?

.

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மீண்டும் பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று தொடக்கம் ஒருவார காலத்திற்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. இந்நிலையில் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சகல வேலைகளையும் எவ்வித பிரச்சினையுமின்றி மேற்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னதாக இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், இன்று தொடக்கம் பணிப்புறக்கணிப்பை
மேற்கொள்ளப்போவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இன்றும் மற்றும் நாளையும் அனைத்து கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதுடன், நாடு தழுவிய ரீதியில் ஒரு வார காலப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று காலை பொதுநிர்வாக அமைச்சுக்கு முன்பாக மௌன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.