Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நினைவேந்தலை அரசு தடுக்கக்கூடாது!

சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

நினைவேந்தலை அரசு தடுக்கக்கூடாது; ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசு தடுக்கக்கூடாது என சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார் இதன் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இறுதி நேரத்தில் மக்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் மக்கள் இறந்தனர். கஞ்சிக்காக வரிசையில் நின்ற வயோதிபர்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.

இறுதி காலங்களில் அந்த மக்கள் எவ்வாறான நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள் என்பதை வருங்கால தலைமுறை அறிந்து கொள்வதற்காக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மூதூரில் நடைபெற்ற போது அதனை செய்த பெண்களை மோசமாக கைது செய்தனர். இது ஒரு தொடர்ச்சியான அசிங்கமான விடயம், இனிமேல் இவ்வாறான விடயம் நடைபெற கூடாது,ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.