Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பொலிஸார் மோதல் – கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் சம்பவம்!

.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

இந்த மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணிகள்  திருக்கோவில் பிரதேச மாவீரர் குடும்பங்கள்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் அரசியல் கட்சிகள்  ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டதோடு மேற்படி துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் காணப்பட்ட பற்றைப்புதர்களை அகற்றி விழுந்து கிடந்த நினைவுச் சுடர்களை நிறுத்தி வைத்து  துப்புரவுப் பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்படி இன்று இம்மாவீரர் துயிலும் இல்லத்தில்  நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை   தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக   முன்னெடுக்கப்பட்டன.இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான  பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. 

அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் என்று நம்பிக்கையுடன் அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர்.

அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் நம்பர் பலகைகள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.