Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம்: ஐக்கிய தேசியக் கட்சி ஆரூடம்

.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை இந்த நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தனி ஒரு ஆளாக சவாலை ஏற்றவர்தான் ரணில் விக்கிரமசிங்க. அவர் அன்று சவாலை ஏற்றதால்தான் மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டை ஆள்வதற்குரிய அனுபவம் குறைவு. எனவே, நாட்டைச் சரியாக வழிநடத்த முடியாமல் பொருளாதாரம் மீண்டும் சரிந்தால், அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை.” – என்றார்.