Breaking News
மட்டக்களப்பு மயானத்தில் ஆணின் சடலம் மீட்பு; நரபலி நடந்ததா?
.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்த சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்தப் பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது தேற்றாத்தீவு பகுதியை சேர்ந்த 32வயதுடைய சதாசிவம் அஜந்தன் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தப் பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் குற்றத்தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.