Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நியூயார்க் நகரின் மேயர் மம்தானி வீட்டின் மீது குண்டு வீச்சு ; அமெரிக்காவில் பரபரப்பு!

ஈரான் போர் நடந்து வரும் சூழலில் மம்தானி இல்லத்தின் முன் முஸ்லிம்களுக்கு எதிராக வலதுசாரிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை அவர் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை கடுமையாக மம்தானி விமர்சித்தும் வருகிறார்.
இந்த சூழலில் நியூ யார்க்கில் மம்தானி இல்லத்திற்கு வெளியே, வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் போர் நடந்து வரும் சூழலில் மம்தானி இல்லத்தின் முன் முஸ்லிம்களுக்கு எதிராக வலதுசாரிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அமெரிக்காவை இஸ்லாம் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், நியூ யார்க்கில் பொது இடங்களில் தொழுகை நடத்தும் உரிமையை பறிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் இருந்த திசையை நோக்கி ஒரு மர்ம நபர் வெடிகுண்டை வீசியுள்ளார். அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது, பொலிஸார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர்.
குண்டு வீசப்பட்ட போது மேயர் மம்தானியும் அவரது மனைவி ரமா துவஜியும் வீட்டில் இருந்தார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மேயர் மீதான கொலை முயற்சி என்று வேகமாகப் பரவி வருகிறது.