Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முறைகேடுகளை அம்பலப்படுத்திய நபருக்கு கொலை மிரட்டல்!

பக்கச்சார்பாக செயற்படும் கிராம சேவகர்!

நாகர்கோவில் கிராம சேவகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டிய  நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.
அக் கிராமத்தில் பணிபுரியும் கிராம சேவகர் பக்கசார்பாக செயற்படுவதாகவும்,  பாதிக்கப்பட்ட சில வீடுகளை இதுவரைக்கும்  வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர்கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம், 'ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மறுபடியும் வாபஸ் வாங்குமாறும் இல்லை என்றால் ஆள் வைத்து கொலை செய்ததாகவும் கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.