பிரான்ஸ், ஜெர்மனியை மிரள வைத்த குட்டி நாடு!
ஐரோப்பாவில் யாருடைய கொள்வனவு சக்தி அதிகம்?
பணவீக்கம் (Inflation) உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், மக்களின் உண்மையான "வாங்கும் திறன்" (Purchasing Power) எப்படி இருக்கிறது என்ற கவலை எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 27 உறுப்பு நாடுகளில், மக்களின் உண்மையான வாங்கும் திறன்குறித்து 'யூரோஸ்டாட்' (Eurostat) அமைப்பு 2024-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு, அங்குள்ள விலைவாசிக்கு ஏற்ப எவ்வளவு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க முடிகிறது என்பதே 'வாங்கும் திறன்' அல்லது கொள்வனவுச்சக்தி ஆகும். இந்த ஒப்பீடு SPA (Standard de Pouvoir d'Achat) என்ற செயற்கை பண மதிப்பில் கணக்கிடப்பட்டுள்ளது, இது நாடுகளுக்கு இடையேயான விலை வித்தியாசங்களை நீக்கி உண்மையான நிலையைக் காட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி வாங்கும் திறன் 26,300 SPA ஆக உள்ளது.
முதலிடத்தில் ஆச்சரியம் தந்த லக்ஸம்பர்க்!
ஐரோப்பாவின் ஜாம்பவான்களான ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பெரிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, மிகச் சிறிய நாடான லக்ஸம்பர்க் (Luxembourg) முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு மக்களின் வாங்கும் திறன் (37,000 SPA) ஐரோப்பிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது.
முதல் 5 இடங்கள்:
லக்ஸம்பர்க் (37,000 SPA)
நெதர்லாந்து (31,400 SPA)
ஜெர்மனி (31,000 SPA)
பெல்ஜியம் (29,500 SPA)
ஒஸ்திரியா (29,400 SPA)
பிரான்ஸ் எங்கே இருக்கிறது?
பிரான்ஸ் இந்தப் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் வாங்கும் திறன் 27,700 SPA ஆக உள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியை (26,300 SPA) விடச் சற்று அதிகமாகும்.
டென்மார்க் (28,200 SPA)
7. பிரான்ஸ் (27,700 SPA)
சுவீடன் (27,500 SPA)
இத்தாலி (25,700 SPA)
ஸ்பெயின் (24,300 SPA)
கடைசி இடங்களில் உள்ள நாடுகள்
இந்தப் பட்டியலின் கடைசி இடங்களில் பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளே இடம் பெற்றுள்ளன. ஹங்கேரி மற்றும் பல்கேரியா மிகக் குறைந்த வாங்கும் திறனைக் கொண்டுள்ளன.
கடைசி 3 இடங்கள்:
எஸ்டோனியா (19,500 SPA)
பல்கேரியா (19,300 SPA)
ஹங்கேரி (18,800 SPA)
இந்த அறிக்கை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள்ளேயே மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார நிலையில் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.


