Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும்.

மே 2009, முல்லைத்தீவின் No-fire zone இல் 150,000 – 190,000 வரையான தமிழ்மக்கள் சிக்குண்டிருந்தனர்

நினைவுகூருவதில் அரசின் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும்.

image

தமிழர்களை நினைவுகூருவதில் அரசின் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும்-என ஹாஸ்டக் ஜெனரேசன் தெரிவித்துள்ளது

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை வாழ் தமிழர்களின் கூட்டு நினைவுகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி முக்கிய பங்குவகிக்கிறது. இது இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் அனுபவித்த சொல்லெண்ணாத் துயரத்தையும், மீண்டெழுதலையும் அடையாளப்படுத்துகிறது. மே 2009, முல்லைத்தீவின் No-fire zone இல் 150,000 – 190,000 வரையான தமிழ்மக்கள் சிக்குண்டிருந்தனர், தொடர் குண்டுத்தாக்குதல்களால் இந்தப்பிரதேசத்தில் பசியும் சாவும் நிறைந்திருந்தது. அரிசியும், தண்ணீரும், கையிருப்பிலிருந்த உப்பும் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்தக் கஞ்சி, 15 வருடங்களுக்கு முதல் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்காப்பானக இருந்தது. இதுவே ஒரு அடக்கப்பட்ட சமூகத்தின் பிழைத்தலுக்கும் ஒருங்கிணைப்புக்கும் அடையாளமானது.

படுகொலைசெய்யப்பட்ட, வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர்களை நினைவுகூருவதில் அரசின் கட்டுப்பாடுகளும், அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும். இது ஒரு சடங்காக, ஒரு சமூகத்தின் ஒன்றுபடும் சமூக உணர்வையும், சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வின் தேவையையும் வலியுறுத்துகிறது.

பாதிப்புக்குள்ளானவர்களின் அனுபவங்களை அங்கீகரிப்பதும், அவர்களின் நினைவுகளை பாதுகாப்பதும் இன நல்லிணக்கத்தின் முக்கிய கூறுகளாகும். மக்கள் தங்களுடைய துயர் பகிர்ந்து , படுகொலைசெய்யப்பட்ட உறவுகளையும், கசப்பான நினைவுகளையும் நினைவுகூருவதற்கான இடமொன்றை, வெளியொன்றை உருவாக்குதலே இதுபோன்றதொரு பெருந்துயரம் மீண்டும் நடப்பதைத் தவிர்ப்பதற்கான வழிமுறையாகும். நல்லிணக்கமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப கடந்தகாலத்தை எப்பொழுதும் நினைவுகூருதல் வேண்டும்.இலங்கைவாழ் தமிழர்களின் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளே இலங்கையில் சமத்துவமும் இன நல்லிணக்கமும் ஏற்படுவதற்கு இன்றியமையாதவையாக அமையக்கூடியன என்பதை அனைத்து இன மத சமூக குழுமங்களும் புரிந்துகொள்ள வேண்டும்