இந்திய தேசத்தின் தமிழின விரோத வரலாற்றில் தமிழீழத் தமிழன் சாந்தனின் சாவும் ஒரு கரும்புள்ளியாகும்..
வையகம் உள்ளவரை வாழும் உம்வரலாறு!
இந்திய தேசத்தின் தமிழின விரோத வரலாற்றில் தமிழீழத் தமிழன் சாந்தனின் சாவும் ஒரு கரும்புள்ளியாகும்..
இந்தியதேசம் தமிழீழத் தமிழனான சாந்தனையும் கொன்று, அழியாவடுவை தனதாக்கிக்கொண்டது. காந்திய தேசத்தைக் காறி உமிழ்ந்து, கரிபூசும் தருணம் இதுவென, மீண்டும் தமிழினத்திற்கு உணர்த்திய காலம்.
உலகமெங்கும், மானிடநேயம் அழிந்த தேசமாக இந்தியா காட்சி தரும் உண்மை முகத்தோற்றம். அமைதிப்படையெனத் தமிழீழம் வந்து, தமிழர் குருதியில் பசிதீர்த்த படுபாதகர் படைகொண்ட தேசம், பெற்ற தாயைக் காணும் சாந்தனின் இறுதி ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமிழினத்தின் மீது தனது கொடூரமுகத்தை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது.
தமிழீழ மண்ணைத் தரிசிக்கும், தாகத்துடன் கொடிய சிறைவாழ்வை முடித்து, அன்னையையும் தாய் மண்ணையும் காணமுடியாத பெருவலியோடு விடைபெற்ற தமிழீழத் தாயின் மைந்தன் சாந்தனுக்கு இறுதிவணக்கம்.
வையகம் உள்ளவரை வாழும் உம்வரலாறு! அடுத்த தலைமுறை இந்தியதேசத்தின் கொடூர வரலாற்றைப் படிக்கும்!
இதுவே நிதர்சனமான உண்மை. இந்திய தேசத்தின் தமிழின விரோத வரலாற்றில் தமிழீழத் தமிழன் சாந்தனின் சாவும் ஒரு கரும்புள்ளியாகும்.


