நாங்கள் முன்னர் வெற்றி என அழைத்தது உண்மையில் வெற்றியல்ல!
வீதிகளை அமைத்துள்ளோம். ஆனால் நல்லிணக்கத்தை உருவாக்கவில்லை.

நாங்கள் முன்னர் வெற்றி என அழைத்தது உண்மையில் மௌனமான ஒரு தருணம், காயங்களை ஆற்றுவதன் மூலம் இடம்பெறாத ஒரு விடயம், ஆனால் சோர்வின் மூலம் சாத்தியமான ஒரு விடயம்.
இது அமைதியின் விடியல் இல்லை, மாறாக உயிர்பிழைத்தலின் நிழல்.
யுத்தம் ஈவிரக்கமற்ற தன்மைக்கு முடிவை காணவில்லை, மாறாக அதனை இயல்பான விடயமாக்கியது. அது ஒரு தலைமுறைக்கு உடைந்த இதயங்களுடன் வெற்று நம்பிக்கைகள் மற்றும் சொல்லப்படடாத துயரங்களுடன் வாழ கற்றுக்கொடுத்தது.
மிகவும் அடிப்படையான மனித பண்புகளான இரக்கம், சமத்துவம், கண்ணியம் ஆகியவை சுயநலம் மற்றும் பயத்தின் கீழ் புதைக்கப்பட்டன.
தேசிய ஒற்றுமை என்ற பெயரில், வெற்றிபெற்றவர்கள் தோல்வியடைந்தவர்கள், தேசபக்தர்கள் துரோகிகள் நினைவில் இருப்பவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் என புதிய சமூக பிளவுகளை உருவாக்கினோம்.
இந்த அடையாளங்கள் உண்மை அல்லது நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. மாறாக விலக்கிவைத்தல் என்ற பலவீனமான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டன.
பதினைந்து ஆண்டுகளின் பின்னரும் இலங்கையில் நாங்கள் இந்த மரபினால் துயரங்களை அனுபவிக்கின்றோம்.
இனம், மதம் அல்லது பிராந்தியத்தை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பிரஜையும் சமமாக பங்கேற்கவும், சுதந்திரமாக பேசவும் கண்ணியமாக வாழவும், அனுமதிக்கும் ஒரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்ப தவறிவிட்டோம்.
வீதிகளை அமைத்துள்ளோம். ஆனால் நல்லிணக்கத்தை உருவாக்கவில்லை.
தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஆனால் பொறுப்புக்கூறலை இன்னமும் உருவாக்கவில்லை.
இறந்தவர்களை எண்ணிவிட்டோம். ஆனால் உயிருடன் உள்ளவர்களை இன்னமும் செவிமடுக்கவில்லை.
போரின் உளவியல் காயங்களை நாங்கள் உண்மையிலேயே குணப்படுத்திவிட்டோமா?அந்த காயங்கள் தொடர்ந்தும் மாறாமலிருப்பதாக நாம் நினைத்தால் நாங்கள் ஏன் இன்னமும், வெற்றிக்காக செலுத்திய விலையை பற்றி சிந்திப்பதற்கு பதில் யுத்தவெற்றியை கொண்டாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்?
நாம் இன்னமும் மௌனத்தை அமைதி என்றும், ஒழுங்கை நீதி என்றும் தவறாக புரிந்துகொள்கின்றோம்.
போர் முடிவடைந்து மற்றுமொரு ஆண்டை நாங்கள் குறிக்கும் இந்த தருணத்தில்வென்று நிலம் கொள்ளுதலை கொண்டாடுவதை தவிர்ப்போம். பணிவுடனும் நேர்மையுடனும் நாம் சிந்திப்போம்.
ஒவ்வொரு இலங்கையரும் தனது சொந்த வீட்டில் இருப்பதாக உணரும்போதுதான், உண்மையான வெற்றி கிடைக்கும், எந்த சமூகமும் அச்சுறுத்தலானதாக காணப்படாமலும், எந்த பிரஜையும் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டதாக உணராமல் இருக்கும்போதுதான் உண்மையான வெற்றி சாத்தியம்.
அதுதான் நாங்கள் ஒருவருக்குகொருவர் கடன்பட்டிருக்கும் அமைதி, அதுதான் நாம் இன்னமும் வெல்லப்படாத சுதந்திரம்.