Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மக்கள் திலகமான எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்த தினம் 17 சனிக்கிழமை மாலை பாசையூரில் கொண்டாடப்பட்டது.

எம் ஜி ஆர் அவர்களுக்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த தினம்  கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆர் அவர்களின் 10 அடி சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

இதன் போது எம்ஜிஆர் அவர்களின் வயதை ஒத்த 109 பேருக்கு தலா 3, 000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதேபோல் 50  வறிய குடும்பங்களுக்கு தலா 5, 000 ரூபாய் உலர் உணவுப் பொருட்களும், 300  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இயற்கை எய்திய பின்னர் 1988  ஆம் ஆண்டு எம் ஜி ஆர் அவர்களுக்காக யாழ்ப்பாணம் பாசையூரில் எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினால் எம்ஜிஆர் அவர்களின் நினைவு சிலை அமைக்கப்பட்டது.
மக்கள் நாயகன் எம் ஜி ஆர் அவர்களுக்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

109 வது பிறந்த தின நிகழ்வுக்கு ஐரோப்பிய தமிழர் எம்ஜிஆர் நற்பணி மன்றம் பிரான்ஸ், மக்கள் படை பிரான்ஸ் ஆகியன நிதி உதவி வழங்கியிருந்தனர்.