Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் நினைவேந்தல் .

நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள்.

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில், இவ் நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடரேற்றபட்டது.தொடர்ந்து ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஊடகவியலாளர் ஐயாத்துரை நடசேனின் நினைவுரையும் இடம்பெற்றது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள்  எனப் பலர் கலந்துகொண்டனர்.

2004 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி மட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசன் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.