Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிளீன் சிறிலங்கா போல இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்! மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை தீர்த்து வைக்குமா?

.

கிளீன் சிறிலங்கா போன்று இனப்பிரச்சனையையும் இந்த அரசாங்கம் கிளீன் செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் அவர்களின் இலக்கை அடையும் புதுவருடமாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு காலடி எடுத்து வைக்கின்றோம். இலங்கை நாட்டில் வருமானம் தரக்கூடிய பொருளாதாரம் எவையும் இல்லை பொருந்தோட்ட பொருளாதாரமும் இல்லை சுற்றுலாப்பயணிகளின் வருகையை மட்டும் தான் பார்த்திருக்கிறார்கள்.

இலங்கை உலக நாடுகள் மற்றும் நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை கட்டுவதென்றால் உடனடி வழிமுறை கூட இல்லை நெல் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் கைத்தொழில் துறையும் எதிர்பார்த்த இலாபத்தை அடையவில்லை இலங்கை அரசாங்கம் கிளீன் சிறிலங்கா போன்று புரையோடி போயுள்ள இனப்பிரச்சனைக்கும் கிளீன் திட்டத்தை கொண்டு வருவார்களாக இருந்தால் உலகத்திலுள்ள தமிழர்களின் நிதியுடன் வடக்கு கிழக்கில் புதிய அபிவிருத்தியை உருவாக்க தயார்.

ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் இங்குள்ள பல தொழிற்சாலைகள் இன்னும் இயங்க முடியாதுள்ளது. இவற்றை இயக்குவதற்கான பண பலத்தை உலகத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.

என்னதான் இருந்தாலும் 80 ஆண்டுகளாகவுள்ள இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் ஒரு தீர்வைக் காண்பார்களாயின் அதிலும் இந்த அரசு இதை காணுமாயின் அது ஒரு புதிய மாற்றத்தை இலங்கைக்கு கொடுக்கும்.

பொலிஸ், காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் எப்பொழுதும் சமாதானமாக பேசுவதற்கு எங்களுடைய சமாதான கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும் என தெரிவித்தார்.