Breaking News
2005 தேர்தலைப் புறக்கணித்ததை, கூறி புறக்கணிக்கச் சொன்னவர்களை தவறு என்று குறை கூறி மீண்டும் தனது நரிக் குணத்தைக் காட்டியுள்ளார் சுமந்திரன்.
.
மீண்டும் தனது குணத்தைக் காட்டியுள்ளார் சுமந்திரன்.
2005 சனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததை தவறு என்று கூறி புறக்கணிக்கச் சொன்னவர்களை குறை கூறி மீண்டும் ரணிலுக்கு ஆதரவு கொடுக்க முற்பட்டுள்ளார் .2010,2015,2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த சனாதிபதித் தேர்தலில் ரணில் தான் சரத் பொன்சேகாவை நிறுத்தினார், மைத்திரியை நிறுத்தினார்,சஜித்தை நிறுத்தினார் அவர்களை ஆதரித்தோம். இப்போ ரணிலே நேரடியாகக் களத்தில் உள்ளார் என்று கூறுவதன் உட்பொருள் என்ன.
அது மட்டுமல்ல இரண்டாயிரத்துப் பத்தில் பொன்சேகாவுக்கு விழுந்த வாக்குகள் ததேகூட்டமைப்புக்கு நாடாளுமன்றத் தேர்தலில் விழுந்த வாக்குகளிலும் மிக அதிகம் என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் மறைக்க முயல்வது என்ன.தாங்கள் தான் பொன்சேகாவை ஆதரிக்குமாறு கூறியதையா .மக்கள் முள்ளி வாய்க்காலில் ஓடிய குருதியை மறக்க முன் ஓடிப்போய் பொன்சேகாவை ஆதரிக்கச் சொன்னது ஏன்.அன்று சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லியிருந்தால் உலகம் ஒரு உண்மையைத் தெரிந்திருக்கும். அதாவது தாங்கள் எவ்வளவு தான் கொடுமைகளைச் செய்தாலும் தமிழினம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று தனது உரிமைகளுக்காகத் தேர்தலைப் புறக்கணித்துள்ளது என்று தானே நினைத்திருக்கும். ஆனால் போரை நடத்திய தளபதியை ஆதரித்து விட்டு கூட்டமைப்புக்கு தேர்தலில் பெற்ற வாக்குகளிலும் பார்க்கப் பொன்சேகா அதிக வாக்குகளைப் பெற்றதாக மக்களைக் குறை கூறுகிறார் பொன்சேகாவை ஆதரித்த சுமந்திரன்.சனாதிபதித் தேர்தலிலும்,நாடாளுமன்றத் தேர்தலிலும் விழுந்த வாக்கு விழுக்காடு குறைவு என்பதை மறைத்துக் கதை விடுகிறார் சுமந்திரன். ஒற்றையாட்சி அரசியல் யாப்பை அதாவது எக்கியராஜ்ஜே என்பது ஒற்றை ஆட்சி அல்ல என்று ரணிலே சொல்லியுள்ளார் அது ஒருமித்த நாடு என்று கூறி அந்தச் சிங்ககச் சொல்லையே தமிழிலும் ஆந்கிலத்திலும் அரசியல் யாப்பில் போட்டு ஒற்றையாட்சியைத் தமிழினத்தின் மேல் திணிக்க முற்பட்டவர்கள் கூட்டமைப்பினர். இதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.