Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டு.மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் முடிவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் முடிவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டு.மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேசக் கிளையின் மகளிர் அணி நிருவாகத் தெரிவு சனிக்கிழமை மாலை பட்டிப்பளையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பிரதேச நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி நிருவாகம் மற்றும் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரைக்கும் ஒரு பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் எமது கட்சி இன்னமும் எதுவித தீர்மானமும் எடுக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் எமது கட்சி சார்ந்து வெளிவரும் கருத்துகளில் எதுவித உண்மைத் தன்மையும் இல்லை.

தமிழரசுக் கட்சியோ, எமது கட்சியின் மகளிர் அணியோ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவதற்குரிய எதுவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.