Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடித்துத் தகர்ப்பு!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையையொட்டி இந்துக் கோவில் இடித்துத் தகர்ப்பு!

பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடித்துத் தகர்ப்பு!

பாகிஸ்தானில் புராதனமிக்க இந்துக் கோவிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள கைபரா கோவில் 1947ஆம் ஆண்டு முதல், பக்தர்கள் யாரும் வழிபடாதக் காரணத்தால் மூடப்பட்டுள்ளது. சிதைவடைந்து காட்சியளித்த குறித்த கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டது.  

இந்துக் கோவில் அமைந்திருந்த இடத்தில், புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோவில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் இந்துக் கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்றுக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, பாகிஸ்தானின் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரச துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் இந்துக் கோவில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.