Breaking News
2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
சவுதி அரேபியா இந்தியாவின் ஐந்தாவது பெரிய வர்த்தக பங்காளி!

பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22 முதல் 23 வரை சவுதி அரேபியாவிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிஅதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். 2016 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் முந்தைய பயணங்களுக்குப் பிறகு, இது அவரது மூன்றாவது சவுதி அரேபிய பயணமாகும். கடந்த செப்டம்பரில் ஜி20 உச்சிமாநாடு மற்றும் மூலோபாய கூட்டு கவுன்சிலின் தொடக்கக் கூட்டத்திற்காக பட்டத்து இளவரசர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசு பயணத்தைத் தொடர்ந்து, இந்தியா-சவுதி அரேபியா மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும். இந்த பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்படும் என தெரிகிறது.