Breaking News
ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதியா?- அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் கேள்வி!
விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,

இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வின் போது தனது கருத்துக்களை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஆளும் கட்சி முன்வைத்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி மேலதிகமாக ஒரு நிமிட நேரத்தை கோரியிருந்தார்.
அவருடைய கோரிக்கைக்கு ஏற்ப அவருக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. எனினும் அவர் மற்றுமொரு கருத்தை முன்வைத்த காரணத்தினால் சபாநாயகர் அவரை மறுத்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,
“ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதி. நீங்கள் என்னை இடையூறு செய்கிறீர்கள், மறுபடியும் எனக்கு ஒரு நிமிடம் தாருங்கள்.
ஏன் நீங்கள் எங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை. முக்கியமான ஒரு காரணத்தை முன்வைக்க நேரத்தை தாருங்கள்.
பக்க சார்பாக நடந்துக் கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்தார்.