Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொட்டாஞ்சேனையில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

சுட்டுக் கொன்றவர் கூலி கொலையாளி, இராணுவத்தின் முன்னாள் கமாண்டோ வீரர்!

கொட்டாஞ்சேனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தின் முன்னாள் கமாண்டோ வீரர் என்றும், கூலி கொலையாளியாக செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரின் ஓட்டுநர், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தங்குமிடம் வழங்கிய நபர், ஓட்டுநருக்கு தங்குமிடம் வழங்கிய இரண்டு பேர் மற்றும் அவருக்கு ஆதரவளித்த நபர்கள் சந்தேக நபர்களில் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 7 ஆம் திகதி இரவு கொட்டாஞ்சேனை, கொலேஜ் வீதி , 16 வது ஒழுங்கையை சேர்ந்த புத்திக பெர்னாண்டோ என்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மஹியங்கனை பகுதியில் மறைந்திருந்தபோது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு கூலி கொலையாளி என்றும், பழனி ரெமோஷன் என்ற நபர் கொடுத்த ஐந்து இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலை நடந்ததாகவும், அதற்காக சந்தேக நபர் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.