Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு – மூவர் கைது!

தங்க நகைகள், வைரம் பதித்த மோதிரம் மற்றும் சுமார் ரூ.4.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு கைக்கடிகாரங்கள் ஆகியவை ஒரு பெட்டகத்திலிருந்து திருடப்பட்டன.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பாக, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று பேரை கொள்ளுப்பிட்டி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

அங்கு தங்க நகைகள், வைரம் பதித்த மோதிரம் மற்றும் சுமார் ரூ.4.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு கைக்கடிகாரங்கள் ஆகியவை ஒரு பெட்டகத்திலிருந்து திருடப்பட்டன.

சுவிட்சர்லாந்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி சென்று ஏப்ரல் 27 ஆம் திகதி திரும்பிய சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே இவர்கள் மூவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூதுவர் சுவிட்சர்லாந்துக்கு சென்ற பிறகு, சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக நகல் செய்யப்பட்ட சாவியைப் பயன்படுத்தி அவரது பெட்டகத்தை அணுகியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் பின்னர் திருடப்பட்டன.

விசாரணைகளைத் தொடர்ந்து, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட நகல் சாவியை உருவாக்கியதாகக் கூறப்படும் சாவி வெட்டும் தொழிலாளி ஒருவரையும் காவற்துறையினர் கைது செய்தனர்.

திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல மோதிரங்களை வெலிகமவில் உள்ள சந்தேகத்திற்குரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடமிருந்து  காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

திருட்டு நடந்த நேரத்தில், இரண்டு பெண் வீட்டு வேலைக்காரர்களும் ஒரு சமையல்காரரும் வீட்டில் இருந்தனர். அவர்கள் விசாரிக்கப்பட்டு, பின்னர் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மூன்று சந்தேக நபர்களும் புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மே 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.