Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருகோணமலையில் தனியார் வைத்தியசாலை உரிமையாளரின் மனைவி மைத்துனரின் கத்திக்குத்துக்கு பலி !

.

திருகோணமலையில் பிரபல தனியார் வைத்தியசாலையின் உரிமையாளரின் மனைவி இன்று செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை தனியார் வைத்தியசாலை உரிமையாளரின் மனைவியான ஏஞ்சலி சுமேத்ரா (63வயது) எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது வெளிநாட்டில் இருந்து இன்று அதிகாலை வருகை தந்து வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் உள்ள மூன்றாவது மாடியில் தனது அறையை திறப்பதற்காக சென்றபோது அறைக்குப் பக்கத்தில் இருந்த மைத்துனரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையின் உரிமையாளரின் சகோதரரான 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.