Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

செம்மணி புதைகுழி பிரதேசம் குற்ற பிரதேசமே!

ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (07.07.25) முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிகள் தவிர மேலும் புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்திலிருந்து ஒன்றரை அடி, இரண்டடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கிறன.
 இது சாதாரணமாக ‘மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட’ இடமாகத் தெரியவில்லை. மாறாக சடுதியாக புதைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் காணப்படுகின்றன.
இது மிகப்பெரும் சர்சையை தோற்றுவித்திருக்கிறது. எனவே முகத்தோற்றத்தின் அளவில், நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது.
இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தினமும் அவதானிக்கப்படும் விடயங்கள் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன என தெரிவித்தார்.